News June 27, 2024
ரோஹித் ஷர்மா புதிய சாதனை

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அதிரடியாக ஆடிவரும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக 5,000 ரன்களைக் கடந்த 5ஆவது வீரர் (5,013*) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விராட் கோலி (12,883), தோனி (12,883), முகமது அசாருதீன் (8,095), கங்குலி (7,643) ஆகியோர் முன்னதாக இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
Similar News
News March 19, 2026
BREAKING: தங்கம் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹2,160 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹3,200 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாலையிலும் மாற்றமின்றி கிலோ ₹2.65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
News March 19, 2026
பும்ராவுக்கு அப்புறம் யார்? அஸ்வின் கேள்வி

பும்ராவின் ஓய்விற்கு பிறகு, இந்திய அணியின் பவுலிங் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இதனால் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் பவுலராக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். ஒரு தொடரையோ போட்டியையோ வெல்வதில் பவுலர்கள்தான் முக்கிய பங்காற்றுவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார்.
News March 19, 2026
பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இன்று வரலாறு காணாத வகையில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்றைய நாளின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் குறைந்து 74,207 புள்ளிகளிலும், நிஃப்டி 776 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளிலும் நிறைவுபெற்றுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ₹13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


