News June 27, 2024
T20 WC: போட்டி மீண்டும் தொடங்கியது

மழையால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியா, இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. கோலி 9, பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் ஷர்மா 37*, சூர்யகுமார் 13* ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 23, 2026
வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாக்கும் தன்மை கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது. இதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. ரத்த சுத்தகரிப்பு, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.
News March 23, 2026
அட்லி இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா?

அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கும் படத்தில் அனுஷ்கா ஷர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்காவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் ஏற்கெனவே தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படக்குழுவினர் இதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 23, 2026
வரலாற்றில் இன்று

➤1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார்.
➤1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
➤1951 – தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த தினம்.
➤1979 – தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தினம்.
➤உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிறது


