News June 27, 2024

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுகிறீர்களா..?

image

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து, சர்க்கரை அதிகமுள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் எனவும் கூறும் மருத்துவர்கள், பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கேரட், வாழைப்பழம், ஆரஞ்சு, அன்னாசி, சாத்துக்குடி ஆகியவற்றை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News March 17, 2026

தவெகவில் இணைந்தார் மதிமுக மாவட்டச் செயலாளர்

image

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், மதிமுக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் சங்கேஷ்வரன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அதேபோல், சேலம் மாநகர செயலாளர் அருள்மாது, மாவட்ட பிரதிநிதிகள், ரஜினிகாந்த், நாகேந்திரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களை அருண்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News March 17, 2026

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 17, 2026

அழுத்தங்களால் கீழடியில் அகழ்வாராய்ச்சி: CM

image

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசை வெளியிட வைப்போம் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!