News June 27, 2024
திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
குமரி: இளம்பெண் தற்கொலை!

அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ரெஜிலா (35). இவர் வளர்த்த மாடுகள், அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ந்ததாக தோட்ட உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, நேற்று ரெஜிலா குடும்பத்தினருக்கும், தோட்ட உரிமையாளர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரெஜிலா அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார். ஆசாரிபள்ளம் GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஞ்சுகிராமம் போலீஸார் விசாரனை.
News December 31, 2025
புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1544 போலீசார்

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகன சாகசங்களில் ஈடுபடுபவர்கள் ANPR கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1544 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.