News June 27, 2024

“இந்தியன் 2” படத்தை வெளியிட தடை கோரி மனு

image

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தை திரையரங்குகள், ஓடிடிகளில் வெளியிட தடை கோரி, மஞ்ச வர்மக்கலை தற்காப்பு கலை, ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் வர்ம கலை முத்திரையை படக்குழுவினர் பயன்படுத்தியதால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

News March 20, 2026

தண்ணீருக்கு போர் போட கிடைத்த ஃப்ரீ கேஸ் கனெக்‌ஷன்!

image

கிணறு வெட்ட போய், பூதம் கிளம்பியது என்பார்கள். அப்படித்தான் இவர்களுக்கு கேஸ் கனெக்‌ஷன் கிடைத்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த ரத்தினம்மா, கடந்த 2011-ல் தண்ணீருக்காக Bore போட்டுள்ளார். தண்ணீர் வராததால், குழாயை மூடும் போது மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்தது. அந்த கேஸ் கனெக்‌ஷனை கிச்சனுக்கு லைன் கொடுத்து, 10 ஆண்டுகளாக ரத்தினம்மா குடும்பம் சமைத்து வருகிறது. இதனால், ஆண்டுக்கு ₹10,000 சேமிக்கிறார்களாம்.

News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!