News June 27, 2024
நிருப்புகலூர் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருப்புகலூரில் வாஸ்து தலமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இன்று சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், அக்னீஸ்வரரை தரிசிக்க வந்தது தெரியவந்தது. கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர் .
Similar News
News January 20, 2026
நாகை: காதலியின் அப்பாவை தாக்கிய காதலன்

வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்வரின் மகளை அதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ்க்கும் கார்த்திகேயனுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனை தனுஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பாடி, வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
News January 20, 2026
நாகை: இன்று மின்தடை அறிவிப்பு!

நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல், நரிமனம் கீழ்வேளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து ம்ன் விநியோகம் பெறும் திட்டச்சேரி, திருமருகல், திருமங்கலம், நரிமனம் கீழ்வேளூர், ஆழியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!
News January 19, 2026
நாகை: வேலை வேண்டுமா? இங்கு போங்க!

நாகை மாவட்டத்திற்கு அருகே திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும் என்கின்றனர். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.


