News June 27, 2024

இந்தியா என்பது இந்து நாடு அல்ல: அமர்த்தியா சென்

image

18ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்த்தியா சென் கருத்து தெரிவித்திருந்தார். இந்தியா என்பது இந்து நாடு அல்ல என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறதெனக் கூறிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான கோடி செலவழிப்பதால், பன்முகத்தன்மை கொண்ட நாடு என்ற உண்மையை மறைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 578 ▶குறள்: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ▶பொருள்:கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

News January 12, 2026

இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு.. சுந்தர் OUT!

image

NZ-க்கு எதிரான நேற்றைய முதல் ODI-ல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. 20-வது ஓவர் வீசிய போது காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய அவர், பேட்டிங் செய்யும் போதும் ரன் ஓட முடியாமல் திணறினார். இந்நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, காயம் காரணமாக <<18824015>>பண்ட்<<>> விடுவிக்கப்பட்டார்.

News January 12, 2026

இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

image

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!