News June 27, 2024

நிலுவை வழக்குகளை குறைக்க AI பயன்பாடு: CJI

image

நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்து வருவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வழக்குகளை தீர்ப்பதற்கு அதிக நீதிபதிகள் தேவைப்படுவதாகவும், இந்தியாவில் மக்கள் – நீதிபதிகள் விகிதம் உலகிலேயே குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், வழக்குகளை குறைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.

News March 5, 2026

தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

image

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.

News March 5, 2026

பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

image

ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதுபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றே தெரியவில்லை என சாடினார். தமிழ்நாட்டில், பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனக்கூறிய அவர், இதுதான் திமுகவுடன் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்றார்.

error: Content is protected !!