News June 27, 2024
திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 27) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. உடன் ஆவடி மாநகராட்சி ஆணையர், நீர்வளத்துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
News October 13, 2025
திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.13) சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர். முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் முழுமையான விவரங்கள் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டது.
News October 13, 2025
திருத்தணி: போதை மாத்திரை கடத்தல் கும்பல் கைது

திருத்தணி ரயில் நிலையத்திற்கு மும்பையிலிருந்து வந்த அதிவிரைவு ரயிலில், வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் பெரும்பாக்கம், புதுப்பேட்டையை சேர்ந்த 6 பேர், 1500 போதை மாத்திரைகளுடன் பிடிபட்டனர். இவர்கள், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. திருத்தணியிலிருந்து சென்னை செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.