News June 27, 2024
கடலூரில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், தலைமையில் இன்று (27.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.
Similar News
News August 7, 2025
கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக குடற்புழு மாத்திரைகள் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 7) ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
கடலூர்: சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை!

கடலூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, IT Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.20,000 வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை 8 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க!
News August 7, 2025
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க