News June 27, 2024
எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 14ஆம் தேதி எடியூரப்பா மீது சதாசிவநகர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News March 23, 2026
5 நாள்களுக்கு போரை ஒத்திவைக்கிறேன்: டிரம்ப்

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவருவது பற்றி ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 5 நாள்களுக்கு ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் & ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என US ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என SM-ல் அவர் பதிவிட்டுள்ளார்.

பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை

வாரத்தின் முதல்நாளே பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் வரை சரிந்து 72,696.39 என்ற நிலையில் வர்த்தகம் நின்றது. நிஃப்டியும் 601.85 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 22,512.65 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனால் முதலீட்டாளர்கள் ₹14 லட்சம் கோடி வரை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.