News June 27, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News October 30, 2025

காஞ்சி: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் சென்று<<>> நவ.16 குள் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறையில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 30, 2025

காஞ்சிபுரம் குளங்களின் நீர்மட்ட நிலவரம்

image

காஞ்சிபுரம் பாலார் பாசனப் பிரிவு வெளியிட்ட இன்றைய நிலவரப்படி, முக்கிய குளங்களில் நீர்மட்டம் கணிசமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் தாமல் 18 அடி, உத்திரமேரூர் 19.50 அடி, மணிமங்கலம் 15.50 அடி என பதிவாகியது. செங்கல்பட்டில் கோளவாய் 9.75 அடி, பழூர் 15 அடி, தையூர் 13.75 அடி, துசி மாமந்தூர் 26.22 அடி உயரத்தில் நீர் உள்ளது என பொது பணித்துறை தெரிவித்துள்ளது.

News October 30, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!