News June 27, 2024

நெல்லை கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 27) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் நலவாரியத்தில் சேர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்ப படிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 19, 2025

சப் கலெக்டர் போல் நடித்து மோசடி; பெண் அதிரடி கைது

image

நெல்லை காரியாகுளம் பகுதியை சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம் சத்தியாதேவி (34) என்பவர் தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 10 பவுன் நகையை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மகிழ்வதனா புகாரில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சத்தியாதேவியை கைது செய்தது.

News October 19, 2025

நெல்லை: கார் மோதியதில் முதியவர்க்கு நேர்ந்த கொடூரம்

image

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது கார் திடீரென மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து திசையன்விளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 19, 2025

தீபாவளி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

image

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழவும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!