News June 27, 2024
ஜியோ கட்டண விலை உயர்வு விவரம்

தினசரி 2ஜிபி டேட்டா உடன் 28 நாளுக்கான ஜியோ கட்டணம் ₹299இல் இருந்து ₹349ஆகவும், அதே டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ₹533இல் இருந்து ₹629ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாளுக்கான கட்டணம் ₹719இல் இருந்து ₹859ஆகவும், 2.5 ஜிபி டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ₹2,999இல் இருந்து ₹600 உயர்ந்து ₹3,599ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
ஜல்லிக்கட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சென்னை HC மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL மேட்ச் கிடையாது. சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்னைகள் எழுந்தன. எனவே ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
News January 7, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து

மதுரை செல்லும் வழியில் CM ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதன்பின் அங்கிருந்து மதுரை செல்லும்போது திருமங்கலம் அருகே கார் டயர் வெடித்துள்ளது. இதுதொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 7, 2026
தி.குன்றம் வழக்கில் பைபிள் வசனத்தை சொன்ன நீதிபதி

திருப்பரங்குன்றம் வழக்கில் <<18776534>>தீர்ப்பளித்த<<>> மதுரை HC நீதிபதிகள், பைபிளை மேற்கோள்காட்டி உள்ளனர். ’கடவுள், ஒளி உண்டாக கடவது என்றார், உடனே ஒளி உண்டாயிற்று’ என்ற வசனத்தை அவர்கள் கூறினர். இதற்கு, ’கடவுளின் வார்த்தையால் இருள் நீங்கி ஒளி தோன்றியது’ என்பதே அர்த்தம். என்னதான் இந்த வழக்கு 2 மதங்களுக்கு மட்டுமே தொடர்பானது என்றாலும், 3 மதங்களையும் ஒன்றிணைத்து நீதிபதிகள் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


