News June 27, 2024

இங்கிலாந்து கவுண்டியில் விளையாடும் ரஹானே

image

இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரஹானே இங்கிலாந்தின் உள்நாட்டுப் போட்டியில் விளையாடவுள்ளார். அங்கு ஒருநாள் கோப்பை மற்றும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட லீசெஸ்டர்ஷைர் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவரது அனுபவம் தங்கள் அணிக்கு உதவும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஹானே விரைவில் நல்ல ஃபார்முடன் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News March 8, 2026

மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

image

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க CM அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். <<19325512>>நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான முர்முவை அவமதிப்பது<<>> ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயல்; இதற்காக ஜனாதிபதியிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2026

தொகுதி மாறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

image

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று MLA, அமைச்சர், DCM என அடுத்தடுத்த பதவிகளை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். வரும் தேர்தலில் அவர் தனது தாத்தாவின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தூத்துக்குடியில் பேசிய அவர், தான் எங்கு போட்டியிட வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

அது நல்ல விஷயம் இல்லை: திவ்யா கணேஷ்

image

விஜய் – சங்கீதா விவாகரத்துக்கு இடையே, த்ரிஷாவும், விஜய்யும் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையானது. இதுகுறித்து பிக்பாஸ் வின்னர் திவ்யா கணேஷ் பேசுகையில், திருமணம் என்றால் 1,000, 2,000 பேர் வரத்தான் செய்வார்கள். தெரிந்த இரண்டு பேர் வந்தால் Hi சொல்லி சேர்ந்து போவார்கள்தானே. அப்படித்தான் இதுவும் என்றார். ஒருவரின் பெர்சனலுக்குள் ரொம்ப ஆழமாக போவது நல்ல விஷயம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!