News June 27, 2024
மாணவியின் தாயாரை ஏன் விசாரிக்கவில்லை?: ஐகோர்ட்

கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பள்ளி மாணவியின் தாயாரை இதுவரை ஏன் விசாரிக்கவில்லை என, காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணை நடத்துவதற்காக நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? பள்ளி வளாகத்தில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியது எப்படி? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
6G சேவை.. பின்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-பின்லாந்து இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியேற்ற ஒத்துழைப்பு, சுற்றுச்சுழல், புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் PM மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியா-பின்லாந்து இடையே AI, 6ஜி தொலைத்தொடர்பு, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.
News March 6, 2026
₹6,769 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

2024-25 நிதியாண்டில் நன்கொடை மூலம் பாஜக ₹6,769 கோடி வருமானம் ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்(ADR) கூறியுள்ளது. 6 தேசிய கட்சிகள் சுமார் ₹7,960 கோடி பெற்ற நிலையில், அதில் பாஜகவிற்கு 85% நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் ₹918 கோடி நன்கொடை பெற்றுள்ளது. வருவாயில் ₹3,774 கோடியை பாஜக செலவழித்துள்ளது. காங்கிரஸ் வருவாயை தவிர்த்து கூடுதலாக ₹193.66 கோடி என மொத்தம் ₹1111.94 கோடி செலவழித்துள்ளது.
News March 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 6, மாசி 22 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


