News June 27, 2024
BREAKING: ஜியோ கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி ஜியோ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ₹155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ₹189ஆகவும், 28 நாள்களுக்கு ₹299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ₹349ஆகவும், ₹399 என்ற மாதாந்திரக் கட்டணம் ₹449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5G திட்டம் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்… மன அழுத்தத்தில் ஊழியர்கள் ?

‘உங்களுடன் ஸ்டாலின்’ உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபோன்ற திட்டங்களில் பணி செய்யுமாறு நிர்பந்திப்பதை உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும் எனவும் இதனால் தாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜூலை 1-ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஊழியர்களின் குற்றச்சாட்டு நியாயமானதா?
News August 24, 2025
ராசி பலன்கள் (24.08.2025)

➤ மேஷம் – களிப்பு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – கீர்த்தி ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – அசதி ➤ கன்னி – பிரீதி ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஓய்வு ➤ தனுசு – பிரயாணம் ➤ மகரம் – திறமை ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – அனுகூலம்.
News August 23, 2025
தங்க வேட்டை நடத்திய இந்திய மாணவர்கள்

சர்வதேச வானியல்-வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இப்போட்டியில் வானியல்- வானியற்பியல் துறையில் மாணவர்களின் திறன் சோதிக்கப்படும். 64 நாடுகளை சேர்ந்த உயர்கல்வி பயிலும் 300 மாணவர்கள் கலந்து கொண்ட ஒலிம்பியாடில் இந்திய மாணவர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். நாட்டிற்கு பெருமை தேடி தந்த மாணவர்களை வாழ்த்தலாமே!