News June 27, 2024
இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூ.1 லட்சம் மானியம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
தேனி: பள்ளி பஸ் மோதி பைக்கில் சென்ற இருவர் பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஞானவேல் (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாடு வாங்குவதற்காக நேற்று (டிச.12) ஜெயமங்கலம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த பள்ளி பேருந்து இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ஞானவேல், மணிகண்டன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 13, 2025
தேனி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
தேனி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்


