News June 27, 2024
துணை வேந்தருக்கு வழங்கபட்ட பதவி

தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.
Similar News
News September 18, 2025
கோவை: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

கோவை மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு கோவையிலுள்ள அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 18, 2025
கோவை: தற்போது வரை 57 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துகளில், 62 இளைஞர்கள் பலியாகினர். இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 207 விபத்துக்கள் நடந்து, அதில் 57 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 11 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
News September 18, 2025
இஸ்ரோ தலைவர் கோவையில் பேட்டி

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதை தெரிவித்தார். டிசம்பரில் ஆளில்லா ராக்கெட் வயோமித்ராவுடன் ஏவப்படும் என்றும், 2027 மார்சில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார். மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை சேகரிக்க, AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.