News June 27, 2024

கள்ளக்குறிச்சி: 10 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 10 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், ஹரிமுத்து, சின்னதுரை, கதிரவன், சிவகுமார், ஷாகுல் ஹமீது, கண்ணன் ஆகியோரை காவலில் எடுக்க அனுமதி கோரியுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 4, 2025

கள்ளக்குறிச்சி: விபத்தில் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரில் இருந்து 60 வயது மூதாட்டி நேற்று(நவ.3) காலை நடந்து சென்றார். அப்போது, சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ம்

News November 4, 2025

க.குறிச்சி: ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சி!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க வந்த மல்லாபுரத்தைச் சார்ந்த தர்மலிங்கம் என்பவர் சொத்துகளை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்ற வலியுறுத்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News November 4, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நல உதவி!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் செல்போன் என மொத்தம் 7 பேருக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

error: Content is protected !!