News June 27, 2024
முடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்க

முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும் என்றால், அதற்கு புரத சத்துகள் மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரதமும், ஜிங்க்கும் நிறைந்த பாதாம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதையை வறுத்து சாப்பிடலாம். புரதம், நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கும் முடி வளர்ச்சியை வேகமாக தூண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 13, 2026
OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.
News March 13, 2026
OBC Creamy Layer & Non- Creamy Layer என்றால் என்ன?

OBC பிரிவினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் Creamy Layer/Non-Creamy Layer என 2 அடுக்குகள் உள்ளன. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்து ஆண்டு வருமானம் ₹8 Lak-க்கு மேல் உள்ளவர்கள் Creamy Layer-ல் வருவார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது. ஆண்டுக்கு ₹8 Lak-க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் Non-Creamy Layer-ல் வருவார்கள். இவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. முற்றிலும் முடங்கப்போகுது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிறு, குறு தொழில்கள் 2 நாள்களுக்குள் முற்றிலும் முடங்கவுள்ளதாக MSME முன்னாள் தலைவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், தயார் நிலையில் உள்ள பொருள்களையும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மூலப்பொருள்கள் விலை உயர்வால் திருப்பூரில் சாய ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


