News June 27, 2024

கடனை அடைத்தால் புதிய படம் தயாரிப்பேன்

image

‘லாபம்’ திரைப்படத்தால் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு, அடுத்த படத்தை தயாரிப்பேன் என்று நடிகர் விஜய் சேதுபதி சீரியஸாக கூறியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய், மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களை மீண்டும் நீங்கள் தயாரிக்க வாய்ப்புள்ளதாக என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தயாரித்த படங்களில் நல்ல அனுபவமே கிடைக்கவில்லை. கடனாளியாக மட்டுமே ஆகியிருக்கிறேன்” என்றார்.

Similar News

News March 20, 2026

ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்பும் அமேசான்

image

12 ஆண்டுகளுக்கு பிறகு Amazon மீண்டும் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு திரும்புகிறது. 2014-ல் வெளியிட்ட FirePhone தோல்வி அடைந்ததால் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது AI அம்சங்களுடன் ‘Transformer’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

News March 20, 2026

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறீர்களா? உஷார்!

image

தற்போதைய சூழலில், வேலை காரணமாக நாம் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறோம். இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் அமர்ந்திருப்பதால் வளர்சிதை மாற்றம், செரிமான செயல்முறைகள் மெதுவாகின்றன *குடல் சுருக்கங்கள் குறைவதால் கழிவுகள் நகர்வது கடினமாகிறது *குடலில் உள்ள நுண்ணுயிர்கள் சமநிலை பாதிக்கப்படுகிறது *மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் ஏற்படுகிறது.

News March 20, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்!

image

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT

error: Content is protected !!