News June 27, 2024
கிருஷ்ணகிரி: தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்டசெயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
Similar News
News September 10, 2025
JUST NOW: கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் செப்.11,12ம் தேதிகளில் வருகை தரவுள்ளதையொட்டி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வரின் பயண வழித்தடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் (UAVs) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
கிருஷ்ணகிரி: மின் துறையில் SUPERVISOR வேலை!

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 10, 2025
சூளகிரி: திரௌபதியம்மனை 14கிராம மக்கள் வழிபாடு!

சூளகிரி அடுத்த பந்தர் குட்டை கிராமத்தில் 14ஊர் கிராம மக்கள் சார்பாக திரௌபதியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஒவ்வொரு கிராம மக்கள் சார்பில் விஷேச பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குவது வழக்கம் என்கிற நிலையில் முருக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தலையில் சீர் சுமத்தப்படி கோயிலுக்கு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.