News June 27, 2024
4 ஆண்டுகளில் 224 கடைகளுக்கு சீல்

மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த 2020 முதல் 2024 மார்ச் மாதம் வரை 4 ஆண்டுகளில் 224 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மருதுபாண்டி என்ற சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மதுரை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.


