News June 27, 2024
நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்

ஏற்றுமதியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், அதில் முதன்மையானது தொழில் துறை என்றும் கூறினார். அத்துடன், உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 15, 2025
விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி: ஐ.பெரியசாமி

விஜய்யை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். விஜய் சினிமா நடிகர் என்பதால், பொழுதுபோக்கிற்காக அவரை பார்க்க மக்கள் கூட்டமாக செல்வதாகவும் கூறியுள்ளார். 2026 தேர்தலில் 2-வது இடத்தை பிடிக்க EPS முயற்சிப்பதாகவும், 3-வது இடத்துக்கு சீமானும், விஜய்யும் போட்டி போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
News September 15, 2025
IND Vs PAK போட்டியில் ₹1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்: சிவசேனா

IND Vs PAK போட்டியில் ₹1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக சஞ்சய் ராவத்(UBT) குற்றம்சாட்டியுள்ளார். இதில் ₹25,000 கோடி பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், முக்கியமாக ₹1000 கோடி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பணம் நம் நாட்டுக்கு எதிராக செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், இது மத்திய அரசுக்கும், BCCI-க்கும் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
News September 15, 2025
சத்குரு முகத்தை காட்டி ₹3.75 கோடி மோசடி

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம் என்று சத்குரு பேசுவது போன்ற போலி வீடியோவை சமூகவலைதளத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண்(57) பார்த்துள்ளார். போலி AI என தெரியாமல், சத்குரு மீதான நம்பிக்கையில், சுமார் ₹3.75 கோடியை ஆன்லைன் டிரேடிங்கில் அப்பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபத்தை withdraw செய்ய முடியாததால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மக்களே உஷார்!