News June 27, 2024
லடாக் பயணம்: நீலகிரி இளைஞர் சாதனை

பந்தலூர் தாலுகா அம்மன்காவு கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (24). இவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கொளப்பள்ளியில் இருந்து நேபாளத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் கடந்த 3 மாதங்களில் 11 மாநிலங்கள் வழியாக 5858 கிமீ கடந்து நேற்று லடாக் சென்றடைந்தார். அவருக்கு நீலகிரி மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News March 1, 2026
நீலகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
நீலகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.
News March 1, 2026
நாளை பிளஸ் டூ தேர்வு: புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்; நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுகள் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் முதன்மை கல்வி அலுவலர் 9788859030, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் 9789773507, நேர்முக உதவியாளர் (மேல்நிலை) 6380075043, நேர்முக உதவியாளர் (இடைநிலை) 8778641230, கண்காணிப்பாளர் 6380734580, பிரிவு எழுத்தர் 9787554038 என்ற எண்களில் அழைக்கலாம்.


