News June 27, 2024
ஜிப்மரில் சர்வதேச இளங்கலை மருத்துவ மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜிப்மரில் 6வது சர்வதேச இளங்கலை மருத்துவ மாநாடு கொன்னாய்ஸன்ஸ் 2024 நாளை முதல் 30 வரை இளங்கலை மருத்துவ மாணவர்களின் மூன்று நாள் மாநாட்டை புதுச்சேரியில் நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
காரைக்கால்: கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது. ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
புதுச்சேரி: ரூ.29,000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 17, 2025
புதுவை: காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு!

புதுச்சேரியின் காவல்துறையில் நடைபெற்ற பல்வேறு கிரிமினல் மற்றும் கொலை குற்றங்களை கண்டறிய பல வருடங்களாக திறம்பட செயல்பட்டு, ஓய்வு பெற்ற
காவல்துறையின் அர்ஜுன் என்ற பெயருடைய மோப்ப நாய் திடீரென்று உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உரிய மரியாதையுடன் மோப்ப நாய் அர்ஜூனை அடக்கம் செய்தனர்.