News June 27, 2024

பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆசை: ஜனனி

image

பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கமுள்ளதாக ‘அவன் இவன்’ பட நடிகை ஜனனி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு நடிகையாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் முகம் சுழிக்க வைக்கும் ஆபாசமான வேடங்களில் ஒருபோதும் நடிக்க விருப்பமில்லை என்றார். தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருவதாகத் தெரிவித்தார்.

Similar News

News April 7, 2026

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

image

நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைப்போ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.

News April 7, 2026

டூப் விஜய்யுடன் தேர்தல் பிரசாரம்

image

தேர்தல் பரப்புரையில் பாதுகாப்பு காரணங்கள், அனுமதி மறுப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி விஜய் இன்னும் பல தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு செல்லாமல் உள்ளார். இந்நிலையில், திருவெறும்பூர் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். விஜய் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மையை பிரசார வாகனத்தில் நிற்க வைத்து, தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

News April 7, 2026

KKR, PBKS போட்டி மழையால் ரத்து

image

கொல்கத்தாவில் நடந்த KKR, PBKS அணிகள் இடையிலான போட்டி மழையின் காரணமாக ரத்தானது. முதலில் பேட்டிங் செய்த KKR, 3.4 ஓவர்களில் 25/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சுமார் 2 மணி நேரம் கழித்து மழை நின்ற நிலையில், ஆடுகளத்தில் நீர் தேங்கியிருந்ததால் ஈரப்பதமாகவே இருந்ததால் போட்டியை தொடரும் முடிவை அம்பயர்கள் கைவிட்டனர். இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

error: Content is protected !!