News June 27, 2024

ஓசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

image

ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள மாடா்ன் மாதிரி பள்ளி உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஜூனியா் சதுரங்கப் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டி வரும் ஜூன் 30 வரை 5 நாள் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 மாணவிகள், 150 மாணவா்கள் என மொத்தம் 240 போ் பங்கேற்றுள்ளனர். போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டின் தலைவா் சந்தாடி, செயலாளா் லோகேஷ் தொடங்கி வைத்தனர்.

Similar News

News March 8, 2026

கிருஷ்ணகிரி: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய 300 பேர்

image

காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியம், பண்ணிஅள்ளி ஊராட்சியில், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சபரி மற்றும் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், நேற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட கழக செயலாளர் மதியழகன் MLA முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்துக் கொண்டனர்.

News March 8, 2026

கிருஷ்ணகிரியில் அதிரடி கைது

image

கிருஷ்ணகிரி ஐந்து ரோடு சாலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாகித் அன்வர் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2,000 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!