News June 27, 2024

ஆணையரை சந்தித்த கோவை வீரர்கள்

image

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் சர்வதேச பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வென்றது. இந்திய அணியில் கோவையைச் சேர்ந்த மோகன் குமார், சதீஷ் குமார், நித்யா, ஜெயபிரபா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். சாதித்த வீரர்கள் நேற்று கோவை கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Similar News

News August 15, 2025

கோவை காவல்துறை அறிவிப்பு

image

கோவையில் மகளிர் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த, Sunmus என்ற நிறுவனத்தின் மீதும், அதன் CEO ஆக இருந்த சிவராமகிருஷ்ணன் மீது 27.05.2024 ஆம் தேதி கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார காவல் துறையினர் தெரிவித்துள்ளது.

News August 15, 2025

கோவை: கடன் தொல்லை நீங்க இங்க போங்க!

image

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில், 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாளான நாளை (ஆக.16), 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கிய மேயர்

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ.2000/- வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் , வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

error: Content is protected !!