News June 27, 2024
புதுப்பொலிவு பெறும் வரலாற்று சின்னங்கள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
ராணிப்பேட்டை: குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.
News August 13, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர்: கழிவுநீர் கால்வாய் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மேல்விஷாரம் நகராட்சியில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்தார். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, தனியான கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
News August 13, 2025
ராணிப்பேட்டை: ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மாக்களே, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் <