News June 27, 2024
தருமபுரி: எஸ்பி அலுவலத்தில் 87 மனுக்களுக்கும் தீர்வு

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News August 11, 2025
தருமபுரி மக்களே உஷாரா இருங்க!

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.
News August 11, 2025
தருமபுரி: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <
News August 11, 2025
கார் மோதி விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த 48 வயது விவசாயி குப்புசாமி, டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.