News June 27, 2024
பாமக டெபாசிட் இழப்பது உறுதி: அமைச்சர் பொன்முடி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது பாமக டெபாசிட் இழப்பது உறுதியாகிவிட்டது என அமைச்சர் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
விழுப்புரம்: தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை போராட்டம்

மத்திய பாஜக அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வரும் ஜூலை 9, 2025 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலை 10 மணிக்கு விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்ட அழைப்பிதழை போக்குவரத்து தொ.மு.ச சார்பில் மு.அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
News July 8, 2025
ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (08.07.2025) விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மையத்திற்கு வருகைபுரிந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், ஆளுநரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், உடனிருந்தார்.
News July 8, 2025
வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT