News June 27, 2024
முதல் முறையாக WC இறுதிப் போட்டிக்கு தகுதி

பல ஆண்டுகளாக வலுவான அணியாக திகழும் தென் ஆப்பிரிக்கா இப்போதுதான் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால், அதுதான் நிஜம். தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதியில் ராசியே இல்லை என்று பல சொல்லி கேட்டிருப்போம். அந்த கூற்றை பொய்யாக்கி நடப்பு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது தெ.ஆ. அணி. வாழ்த்துகள்.
Similar News
News March 4, 2026
வங்கிக் கணக்கில் ₹9000… தமிழக அரசு இன்ப செய்தி

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.
News March 4, 2026
உடல் பருமன்.. பிரச்னையா? நோயா?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் <<18704186>>சர்வதேச உடல் பருமன் தினம் <<>>இன்று அனுசரிக்கப்படுகிறது. உடல் பருமனை வெறும் வாழ்க்கை முறை பிரச்னையாக மட்டுமின்றி, ஒரு நோயாக அங்கீகரிப்பது முக்கியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தீவிர டயட், மருத்துவ சிகிச்சை என்பதை தாண்டி, உடல் பருமனுடன் போராடும் ஒவ்வொருவரையும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
News March 4, 2026
விஜய் நிகழ்ச்சியில் விபத்து.. ஒருவர் கவலைக்கிடம்

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சென்றபோது, அவரது காரை பின்தொடர்ந்து பலரும் பைக்கில் சென்றனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதிக அளவு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.


