News June 27, 2024
செங்கல்பட்டு: 11 பேருக்கு வீட்டு மனை பட்டா

செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட 11 பேருக்கு உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News December 24, 2025
செங்கல்பட்டு: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

செங்கல்பட்டு மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு <
News December 24, 2025
செங்கல்பட்டு உழவர் சந்தையில் காய்களின் விலை

செங்கல்பட்டு உழவர் சந்தையில் (பெ.வெங்காயம்) ரூ.28,(சி-வெங்காயம்) ரூ.50
(தக்காளி) ரூ.37, (பச்சை மிளகாய்) ரூ.42,(பீட்ரூட்) ரூ.38, (உருளைக்கிழங்கு) ரூ.30, (வாழைப்பூ) ரூ.16, (குடைமிளகாய்) ரூ.49,(பாகற்காய்) ரூ.34, (சுரைக்காய்) ரூ.31, (அவரைக்காய்) ரூ.37, (முட்டைக்கோஸ்) ரூ.27, (கேரட்) ரூ.39,(காலிஃபிளவர்) ரூ.27, (கொத்தவரை) ரூ.45, (தேங்காய்) ரூ.70, (பூண்டு) ரூ.96, (இஞ்சி) ரூ.75 விலையில் விற்பனையாகிறது.
News December 24, 2025
செங்கல்பட்டு: போலி மருத்துவர் கையும் களவுமாக மாட்டினார்

துரைப்பாக்கத்தில் ‘தனியார் கிளினிக்’ நடத்தி வந்த விஜயகுமார் (38) என்பவர், முறையான மருத்துவப் படிப்பு இன்றி 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேற்கு வங்கத்தில் MBBS படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த அவரை, மருத்துவக் குழுவினர் கண்டறிந்தனர். இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


