News June 27, 2024

இந்தியன் -2 கதையை முன்பே பேசியிருக்கிறோம்: அட்லி

image

‘இந்தியன் – 2’ திரைப்படம் இந்திய சினிமாவிற்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் என இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்தபோதே, இப்படத்தின் கதை குறித்து இருவரும் பேசி இருப்பதாகவும், கமல்ஹாசனுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கமல் படங்களை பார்த்து கற்றுக் கொண்டுதான் தான் சினிமாவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

Similar News

News March 3, 2026

திமுகவை மிரட்டும் காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

image

2026 தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இன்றி வெற்றிபெற முடியாத பலவீனமான நிலையில் திமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். அதனால் தான், CM ஸ்டாலின் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார் என பேசியுள்ளார்.

News March 3, 2026

SPORTS 360°: கேட்ச் பிடிப்பதில் இந்தியா மோசமான சாதனை

image

*போர் காரணமாக ZIM, WI கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் * போர் பதற்றத்தால் கூடைப்பந்து WC குவாலிஃபையர் போட்டிகளை FIBA ஒத்திவைத்துள்ளது *நடப்பு டி20 WC தொடரில் இந்திய வீரர்கள் 13 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர் *இன்று தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், உன்னதி ஹூடா, மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர் பங்கேற்பு

News March 3, 2026

CINEMA 360°: தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீஸ்

image

*தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *’ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்’ படத்தில் நடித்த டாம் ஹோலண்ட்- ஜெண்டயா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கசிந்துள்ளது *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள RAI RAI RAA RAA பாடல் வெளியானது

error: Content is protected !!