News June 27, 2024
IND vs ENG: மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்?

T20 WC அரையிறுதிப் போட்டியில், இன்று இந்தியாவும், இங்கிலாந்தும் மோத உள்ளன. போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால். ICC விதிகளின் படி, சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில், 6 புள்ளிகள் கொண்ட IND அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 4 புள்ளிகளை கொண்ட ENG வெளியேறும்.
Similar News
News March 5, 2026
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 5, 2026
அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News March 5, 2026
EPS இதனால்தான் பதற்றத்தில் இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

நிதிஷ்குமார் நிலைமை மூலம் NDA-ல் உள்ள கூட்டணிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியது பற்றி குறிப்பிட்ட அவர், பாஜக கூட்டணிகளில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதனால்தான், EPS போன்ற தலைவர்கள் சிறிது பதற்றமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


