News June 27, 2024
ராகுல் காந்திக்கு உள்ள அதிகாரங்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவை எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பல முக்கிய துறைகளின் அதிகாரிகள் நியமனத்தில், அவருடைய பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். பல கூட்டு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருப்பதற்கான உரிமை அவருக்கு உள்ளது. CBI, மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும் தேர்வு குழுக்களிலும் அவர் இடம்பெறுவார்.
Similar News
News December 25, 2025
சென்னை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சென்னை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <
News December 25, 2025
கிறிஸ்துமஸ் வழிபாட்டில் PM மோடி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முக்கிய முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


