News June 26, 2024

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

நட்சத்திர பூவாக மின்னும் பூஜா ஹெக்டே

image

மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே போட்ட ஆட்டம் இன்னும் இளசுகளின் மனதில் நீங்காமல் ஒட்டிக்கொண்டு உள்ளது. அவர்களுக்காகவே அடுத்த ட்ரீட்டாக, மின்னும் மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும் போட்டோஸை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். கண்களால் இதயங்களை நொறுக்கும் சக்தி, பூஜா ஹெக்டேவுக்கு மட்டுமே உள்ளதாக பலர் பதிவிட்டு வருகின்றனர். பூஜாவின் அழகை ரசிக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.

News October 17, 2025

148 ஆண்டுகால கிரிக்கெட் சாதனையின் விளிம்பில்..

image

7 மாதங்கள் பிறகு, கோலி இன்னும் இரு தினங்களில் ப்ளூ ஜெர்சியில் விளையாடவுள்ளார். 148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத சாதனையின் விளிம்பில் கோலி உள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் மட்டும் அடித்தால், ஒரு பார்மெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். சச்சின் டெஸ்டில் 51 சதங்களும், கோலி ODI-ல் 51 சதங்களும் அடித்துள்ளனர். இந்த உலக சாதனையை கிங் கோலி படைப்பாரா?

News October 17, 2025

உருட்டு கடை அல்வாவுக்கு அமைச்சர் பதிலடி

image

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அச்சிட்டு, ‘உருட்டு கடை அல்வா’ என்ற பெயரில் EPS விநியோகித்தது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஆனால், இன்ஸ்டா பாலோவர்ஸ்ஸை அதிகரிப்பதற்கு EPS இவ்வாறு அரசியல் செய்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவை திருட்டு கடையாக மாற்றியவர் EPS எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!