News June 26, 2024

‘தேசிங்கு ராஜா 2’ படப்பிடிப்பு நிறைவு

image

எழில் இயக்கத்தில், 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், காமெடி ஜானரில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகம் 11 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி வருகிறது. அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

Similar News

News March 5, 2026

திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவி நிரப்பப்படவுள்ளது. தகுதியுடைய நபர்கள் https://tiruchirappalli.dcourts.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் 16 ஆம் தேதிக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

image

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 5, 2026

அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

image

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!