News June 26, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 1, 2026

புதுகை: வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து!

image

நமணசமுத்திரத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் தீரஜ்குமார் (31). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று பணியில் இருந்த போது ரெயில் வந்ததால் ரெயில்வே கேட்டை மூடினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கேட்டை திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

புதுக்கோட்டை அருகே வாலிபர் பரிதாப பலி

image

குடுமியான்மலை அடுத்த குருக்களையாப்பட்டியைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமநாடு கிரசர் அருகே வந்தபோது ஆறுமுகம் என்பவரது  கடைக்கு முன் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News January 1, 2026

புதுக்கோட்டை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

புதுக்கோட்டை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. 2025-ம் ஆண்டில் புதுகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

error: Content is protected !!