News June 26, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், சென்றடைய வேண்டும். குறிப்பாக, சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், சாதிவாரி கணக்கெடுப்புடன், பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 3, 2025
BREAKING: விஜய்யின் அணியில் இணைந்தனர்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற IG ரவிக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இணைந்துள்ளனர். உளவுப்பிரிவு உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ஓய்வு பெற்ற DSP-க்கள் சஃபியுல்யா, சிவலிங்கம், ADSP அசோகன்(ஓய்வு) ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
News November 3, 2025
உடல் எடை குறைய வெறும் 30 விநாடிகள் இத பண்ணுங்க!

★Mountain Climbers செய்வது உடல் எடையை குறைத்து, முழு உடலையும் வலுப்படுத்தும் ★செய்முறை: இரு கைகளையும் தரையில் ஊன்றி, முட்டியையும், கால்களையும் நேராக வைத்தபடி இருக்கவும் (படத்தில் உள்ளது போல) ★இப்போது மெதுவாக, ஒரு முழங்காலை மார்பு நோக்கி கொண்டு வந்துவிட்டு, கீழறக்கவும் ★அதே போல, காலை மாற்றி கொஞ்சம் வேகமாக செய்யவும். ஆரம்பத்தில் 20 முதல் 30 விநாடிகள் மட்டும் செய்யலாம். SHARE IT.
News November 3, 2025
Cinema Roundup: தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே. *கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீசாகிறது. *நவ.14-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ‘டியூட்’ ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பராசக்தி’ முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவிப்பு. *விக்ரம் 63-ல் மீனாட்சி செளத்ரி நடிக்கவுள்ளார்.


