News June 26, 2024
திருச்செந்தூர் கோவிலில் திருவிழா அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 13, 2025
தூத்துக்குடி: 2,835 கிலோ பீடி இலைகள் கடத்தல்!

தூத்துக்குடி கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் திடீர் சோதனையில் மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக 81 முட்டைகளில் 2,835 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


