News June 26, 2024
சலுகைகள் அறிவித்தது தமிழக அரசு

கோயில்களில் திருமணம் செய்வோரில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி எனில் சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள 4 கிராம் தங்கம், மண்டபம் இலவசம் என்ற சலுகையுடன் ₹60 ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகள் வழங்கப்படும் என்றும் நிதி வசதியற்ற கோயில்களில் குறைந்த ஊதியம் பெறும் இசை கலைஞர்களுக்கு ₹10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
Similar News
News March 13, 2026
ஈரான் அதிபருடன் பேசிய PM மோடி

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியனுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பொதுமக்களின் உயிரிழப்பு & உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் ஆகியவை தனது முதன்மையான முன்னுரிமைகள் என்பதையும் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.
News March 13, 2026
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்

இங்கிலாந்தில் நடைபெறும் ’தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாக்., அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் SRH அணியின் CEO காவ்யா மாறன் நேரடியாக பங்கேற்று சுமார் ₹2.34 கோடிக்கு அவரை வாங்கியுள்ளார். இதன்மூலம் இந்திய உரிமையாளர்கள் பாக்., வீரர்களை தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


