News June 26, 2024
வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!

94987 94987 என்ற தமிழ்நாடு மின்சார வாரிய மொபைல் எண்ணை, மின்வாரியத்தில் கொடுத்த மொபைல் எண் கொண்ட ஃபோனில் Save செய்ய வேண்டும். அதன்பிறகு, உங்கள் மின் கட்டணத்திற்கான தகவல் வாட்ஸ்அப்பில் வரும். அதில், Pay Bills என்ற ஆப்சனை ஓபன் செய்து, UPI மூலம் சில நிமிடங்களில் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் மட்டுமே வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியும்.
Similar News
News March 17, 2026
நினைவாற்றலுக்கு உதவும் இசை!

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது: நயினார்

சேலத்தில் மூதாட்டி ஒருவரை கஞ்சா போதையில் 2 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டதாகவும், TN குற்றங்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்தில் கொடூர குற்றங்கள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.