News June 26, 2024

முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

image

புதுகை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான முன்னாள் படை வீரர்கள் தங்கள் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவியிடம் வழங்கினார்கள்.

Similar News

News March 3, 2026

BREAKING புதுகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

புதுக்கோட்டை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 3, 2026

புதுக்கோட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!