News June 26, 2024
புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் பயனடையலாம். இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரி சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2026
ஆம்பூரில் அடித்தே கொடூர கொலை!

ஆம்பூர் அடுத்த கடம்பூர் ஊராட்சி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த பிரசாந்த்(24). இவரது மனைவி வினோதினி(22). 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வினோதினி வேறு ஒரு நபரின் தகாத உறவில் இருந்ததாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் பிரசாந்த் வினோதினியை அடித்தே கொடூர கொலை செய்துள்ளார். போலீசார் பிரசாந்த்தை கைது செய்துள்ளனர்.
News February 26, 2026
திருப்பத்தூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் கொண்டம் கோதப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா (வயது 66) என்பவர் நேற்று (பிப்.25) பெங்களூரில் உள்ள உறவினரை பார்க்க தனது மனைவியுடன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது முதல் பிளாட்பாரத்தில் திடீரென மயங்கி, மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 26, 2026
ஆம்பூரில் கிடந்த ஆண் சடலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று ஒருவர் உயிரிழந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


