News June 26, 2024

விஜய் பரிசு வழங்கும் விழாவில் கட்டுப்பாடு

image

10, 12ஆம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசு வழங்கும் விழா, இரு கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க தவெக சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன், பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், அலைபேசி எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

image

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2026

பெண்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரும் திட்டம் பற்றி தெரியுமா?

image

விவசாய கூலிகளாக இருக்கும் SC, ST வகுப்பை சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’. இதன்கீழ் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். இதற்கு தேவையான கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் <>https://tahdco.com/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News March 1, 2026

பரிதாப நிலையில் தமிழ் நடிகை.. உயிருக்கு போராட்டம்

image

காதல், அரவான், உடன்பிறப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த ‘காதல்’ மல்லேஸ்வரி, கடும் நுரையீரல் தொற்றால் சென்னை ஓமந்தூரார் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். கவனிக்க ஆளின்றி தனியாக இருக்கும் அவர், ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!