News June 26, 2024
25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்கள் இருக்குமா?

நிலவின் தொலைதூர தென் பகுதியில் இருந்து, பாறை துகள்கள் & மணல் மாதிரிகளை சேகரித்த சீனாவின் ‘சாங் – இ6’ விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளில், 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவின் அரிய தடயங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நிலவின் இருபுறங்களுக்கு இடையே உள்ள புவியியல் வேறுபாடுகளுக்கு, இந்த மாதிரிகள் பதில் அளிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Similar News
News September 17, 2025
இடையூறு செய்யும் காவிக்கொள்கை: ஸ்டாலின்

தமிழக வளர்ச்சிக்கு காவிக்கொள்கை இடையூறு செய்வதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், 2,000 ஆண்டுகளாக காவிக்கொள்கையுடன் போராடி வருகிறோம் என்றார். நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சியான திமுக, யாருடைய மிரட்டலுக்கும் பயப்படாது என்றும் கூறியுள்ளார். 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்துவது எப்படி?

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கமானது 3 வயது வரை இருக்கலாம். அதற்கும் மேலே தொடரும்போது, அவர்களுக்கு பல் சார்ந்த பிரச்னைகளும் பேச்சுத்திறன் குறைபாடுகளும் ஏற்படக்கூடும். இதனை தடுக்க ➤குழந்தையின் விரலில் வேப்பெண்ணையை தடவலாம், ➤இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கலாம். ➤தீவிரமாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் நலமருத்துவரின் உதவியை நாடலாம். SHARE.
News September 17, 2025
கணவருக்கு இது தார்மீக பொறுப்பு: கொல்கத்தா HC

நல்ல உடல்தகுதியுள்ள கணவர், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது என்பது சமூக, தார்மீக பொறுப்பு என்று கொல்கத்தா HC தெரிவித்துள்ளது. தனக்கு வேலையும் வருமானமும் இல்லை என்ற கணவரின் வாதத்தை ஏற்க மறுத்த HC, பராமரிப்பு தொகையாக மாதம் ₹4,000 வழங்க உத்தரவிட்டுள்ளது. கணவனின் குடும்பத்தார் விவாகரத்து கோர வற்புறுத்தியதால், பராமரிப்பு தொகை வழங்க கோரிய மருமகளின் மனு மீது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.