News June 26, 2024

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 19, 2025

குடியரசு தின சிறப்பு விருந்தினர்கள் இவர்கள் தான்

image

2026 குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக, ஐரோப்பிய கமிசன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தலைவர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News December 19, 2025

ராசி பலன்கள் (19.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 19, 2025

MGNREGA-ஐ வலுப்படுத்த PM மோடிக்கு CM வலியுறுத்தல்

image

VB-G RAM G திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டுக்கு 125 வேலை நாள்கள் என்பதை வரவேற்றுள்ள ஸ்டாலின், பிற அம்சங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றார். 60:40 என்ற புதிய பகிர்வால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, MGNREGA திட்டத்தை வலுப்படுத்தி தக்கவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!